×

பரமக்குடி ரேஷன் கடைகளில் கல், தூசியுடன் கடலை விநியோகம் பொதுமக்கள் அதிர்ச்சி

பரமக்குடி, டிச.30:  பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்  கொண்டைக் கடலையில் கல் மற்றும் குப்பைகள், தூசுகள் இருப்பதால் குடும்ப அட்டைத்தாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 114 நிரந்தர ரேஷன் கடைகளும், 33 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகளில் மொத்தம் 70 ஆயிரத்து 127 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 69,100 அரிசி காடுகளாக உள்ளது. இந்த கார்டுகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கொண்டைக் கடலை வினியோகம் தொடங்கிய நிலையில், 5 கிலோ கொண்டைக்கடலையில் ஒரு கிலோ அளவிற்கு கல் மற்றும் தூசுகள் இருப்பதால் குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசு சார்பில் வழங்கப்படும் பொருள்கள் தரமானதாக இல்லாமல், ஏதோ கடமைக்கு வழங்குவது போன்று வழங்கி வருகின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திமுக நகர செயலாளர் ஜீவரத்தினம்  கூறுகையில், ‘‘பரமக்குடி பகுதியில் விநியோகிக்கப்படும் கொண்டைக் கடலையில் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை கல் மற்றும் தூசுகள் இருக்கிறது. தமிழக அரசு அறிவிப்புக்காகவும், மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான கலப்படம் நிறைந்த பொருட்களை நுகர்வோர் கழகத்தின் மூலமாக வழங்குவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசால் கொடுக்கப்படும் இந்த மாதிரியான சலுகைகள் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : public ,Paramakudi ,ration shops ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்